இன்று நியாய விலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குடும்ப அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை செய்தனர்.
நியாய விலை கடையின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் பணியாற்றி உள்ளனர். எனவே, விடுமுறை நாட்களிலும் நியாய விலை கடைகள் வேலை நாட்களாக செயல்பட்டதற்கு, பதிலாக இந்த மாதம் செப்டம்பர் 19-ஆம் தேதி, வரும் அக்டோபர் 17, நவம்பர் 21 ஆகிய தேதியில் அதாவது, மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை (இன்று ) நியாய விலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…