Mayiladuthurai: மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை இன்னும் சிக்காததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்மங்குளம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தது பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வரும் நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேசமயம் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சிறுத்தையை பிடிக்க காவல்துறையும், வனத்துறையும் வலைவீசி தேடி வருவதாக கூறப்பட்ட நிலையில், செம்மங்குளம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சிறுத்தையை பிடிக்க வனத்துறையும், காவல்துறையும் ஈடுபட்டு வரும், சிறுத்தை இன்னும் சிக்கவில்லை.
சிறுத்தை செம்மங்குளம் பகுதியில் இருந்து 3 கிமீ தொலைவை கடந்து ஆரோக்கியநாதபுரம் என்ற இடத்தில் பதுங்கி இருக்கலாம் என்றும் அல்லது வேறொரு இடத்திற்கு சென்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறியதாவது, சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள் மற்றும் வலைகள் வைக்கப்பட்டுள்ளது.
வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதிநவீன சென்சார் பொருத்திய கேமராக்கள் காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டு வலைவீசி தேடி வருகின்றனர் என்றார். எனவே, சிறுத்தை இன்னும் சிக்காததால் மயிலாதுறை பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
இதன் காரணமாக, மயிலாடுதுறை நகரில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில்…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய…
அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…
சென்னை :ஜவ்வரிசி வைத்து பஞ்சு போல ரசகுல்லா செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்:…
செங்கல்பட்டு : பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை என்றும் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி செங்கல்பட்டு…