நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 23ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இதேபோல், காவிரி துலா உற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 23ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025