ராமநாதபுரம் மாவட்டத்தில் வயிற்றுவலி என்று சென்ற நபருக்கு 2 மாதங்களாக HIV சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் இருளப்பன். இவருக்கு வயது 52. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் அவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு எயிட்ஸ் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது இதனால் அவருக்கு இரண்டு மாதங்களாக எயிட்ஸ் நோய்க்கான மாத்திரை மற்றும் மருந்துகள் கொடுத்து வந்தனர். இருப்பினும் அந்த விவசாயிக்கு வயிறு வலி குறையாத காரணத்தால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எயிட்ஸ் தொற்று இல்லை என்றும் விவசாயிகள் எயிட்ஸால் பாதிக்கப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பித்தப்பையில் கல் இருந்ததால் தான் வயிற்று வலி ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பித்தப்பை கல் அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று தனக்கு எயிட்ஸ் இருப்பதாக கூறியது குறித்து விளக்கம் கேட்டார். இதனையடுத்து, இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…