2 வயது குழந்தைக்கு HIV தொற்று ரத்தம்…கோவையில் பரபரப்பு…!!
- விருதுநகரில் கர்பிணிப்பெண்ணுக்கு HIV தொற்று ரத்தம் செலுத்திய விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
- கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு HIV தொற்று ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் சித்ரா தம்பதிகள் இந்த தம்பதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண் மற்றும் பெண் குழந்தை என்று இரட்டை குழந்தைகள் பிறந்தது. இரண்டு வயதாகும் இந்த குழந்தையில் பெண்குழந்தைக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் ஜூலை மாதம் உடல்நிலை சரியில்லாமல் போனதால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தைக்கு இருதய நோய் இருப்பதாகவும் , மேல்சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில் ஆணும்,அனுமதியுங்கள் என்றும் அவர் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்.