எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் , அவரது கணவருக்கு அரசு வேலை வழங்கப்படும் …! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் , அவரது கணவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், சாத்தூர்அரசு மருத்துவமனையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் , அவரது கணவருக்கு அரசு வேலை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.பரிசோதனை செய்யாத ரத்தத்தை ஏற்றியது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.