நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இரட்டை இலையே என்றென்றும் வெல்லும் – ஓபிஎஸ், இபிஎஸ்

Default Image

வாக்கு எண்ணிக்கையின்போது கட்சியினரும், தோழமை காட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், முகவர்களும் ஆரம்பம் முதலே கவனமாக இருந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர் கூட்டு அறிக்கை.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில், கருத்து கணிப்புகள் எந்தவித மனசோர்வை தரவில்லை என்பதைக் கேட்டுப் பெருமிதம் கொள்கிறோம்.

அதிமுக என்னும் ஆலமரம் எந்த சலசலப்புக்கும் அசைந்துவிடாமல், அண்டிவந்தோர் அனைவருக்கும் வாழ்வளிக்கும் கற்பக விருட்சம் என்பதே உண்மை. தமிழகம் முழுவதிலும் இருந்து வருகின்ற தேர்தல் பணிகள் குறித்த தகவல்கள், அதிமுக வியக்கும் வகையில் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சியை அமைக்கும் என்றே உறுதிபடத் தெரிவிக்கின்றன.

கடந்த 2016 சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன் அனைத்து கருத்துக் கணிப்புகளும், அதிமுகவின் வெற்றியை குறிப்பிடவில்லை. திமுகவே ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் முடிவுகள் வெளிவரும் முதல் நாள் வரை சொல்லிக்கொண்டிருந்தன. ஆனால், அந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது அம்மாவின் அதிமுக ஆட்சிதான் என சுட்டிக்காட்டினார்.

இப்போது வரும் கருத்து கணிப்பு முடிவுகள் கழகத்தினரை சோர்வடையச் செய்து, வாக்கு எண்ணிக்கையின் போது நமது செயல்பாடுகளை முடக்கி, ஜனநாயகக் கடமை ஆற்றவிடாமல் செய்வதற்கான முயற்சிகளே. நம்மை சோர்வடையச் செய்வதற்கான சூழ்ச்சிகள் எதையும் நம்பிவிடாமல் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின்போது கட்சியினரும், தோழமை கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், முகவர்களும் ஆரம்பம் முதலே கவனமாக இருந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். திமுக-வினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும்.

ஆகையால், மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து தீர்வு காண வேண்டும். மேலும், அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியே வர வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்