தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்பட்ட வரலாறு,உறுதி செய்த கீழடி மண் -மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி மண் உறுதி செய்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்பது கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கீழடியில் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்,அது தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி மண் உறுதி செய்திருக்கிறது.
தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும்.தமிழர்களின் கலாசாரத்தை மத்திய அரசு பாதுகாக்க தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் என்று கூறினார்.