“வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு…முதல்வருக்கு நன்றி” – கே.ஸ்.அழகிரி பாராட்டு!
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பாக சிலை அமைக்கப்படுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்றும்,தமிழக முதல்வருக்கு நன்றி என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.ஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த,”கர்னல் ஜான் பென்னிகுயிக்” அவர்களின் புதிய சிலையை,அவர்கள் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,பென்னிகுயிக்கிற்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பாக சிலை அமைக்கப்படுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்றும்,தமிழக முதல்வருக்கு நன்றி என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.ஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
“முல்லை பெரியார் அணையைக் கட்டிய பென்னிகுயிக்கிற்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பாக சிலை அமைக்கப்படுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.தமிழக காங்கிரஸ் சார்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியார் அணையைக் கட்டிய பென்னிகுக்கிற்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பாக சிலை அமைக்கப்படுவது வரலாற்று சிறப்பு வாயந்த நிகழ்வு. தமிழக காங்கிரஸ் @INCTamilNadu சார்பாக முதல்வர் @mkstalin அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
— K.S.ALAGIRI (@KS_Alagiri) January 16, 2022