இலங்கை CAA சட்டத்தின் கீழ் இல்லை என்றாலும், தீவில் உள்ள இந்து தமிழர்கள் இன கலவரத்தில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், அந்த CAA சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை.
மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமைச்சட்டம் (CAA)-இன் படி, இஸ்லாமியர் அல்லத சிறுபான்மையினர் பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து டிசம்பர் 2014க்குள் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
அந்த சட்டத்தின் கீழ் இலங்கை குறிப்பிடப்படவில்லை. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தமிழகத்தில் திருச்சியில் 1993ஆம் ஆண்டு பிறந்தவர் அபிராமி. இவர் பெற்றோர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள். இவர்தான் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அபிராமி இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, படிப்பு முடித்துள்ளார். இவர் ஆதார் கார்டு போன்றவையும் வைத்துள்ளார். இவர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் ஒற்றை நீதிபதிஅமர்வின் கீழ் வந்தது. இதனை விசாரித்த, நீதிபதி, இலங்கை CAA சட்டத்தின் கீழ் இல்லை என்றாலும், தீவில் உள்ள இந்து தமிழர்கள் இன கலவரத்தில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், அந்த CAA சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் என்று கூறியது.
அபிராமி இந்தியாவில் பிறந்தவர். அவர் இலங்கையை தனது நாடாக கருதவில்லை. ஒருவேளை அவரது மனு நிராகரிக்கப்பட்டால், அவர் தேசமற்றவராக மாறிவிடுவார் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 16 வாரத்திற்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கை தள்ளிவைத்துள்ள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…