அமரன் பட பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்: இந்து முன்னணியினர் கைது.!
இந்து முன்னணி மாநிலத் துணை தலைவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த தகவல் பரவியதும், தியேட்டரை பார்வையிடுவதற்காக வந்த இந்து முன்னணியினருக்கு போலீசார் அனுமதி தர மறுத்தனர்.
பின்னர், இருவருக்குமிடையே வாக்குவாதம் நடந்த நிலையில், மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட இந்து முன்னணியினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, பெட்ரொல் குண்டு வீசப்பட்ட நிலையில் காலை 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மதியம் 03:30 மணிக்கு கங்குவா திரைப்படமும், மாலை 5 மணிக்கு அமரன் திரைப்படமும் திரையிடப்படும் என தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025