திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் 6 மாதத்திற்கு முன் இந்து முன்னணியில் சேர்ந்தார். 3 மாதத்திற்கு முன்பாக இந்து முன்னணியில் அதவத்தூர் ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் நேற்று இரவு தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்புறம் நிறுத்தி சென்றதாகவும் , இரவு 2 மணி அளவில் வீட்டின் கண்ணாடி கதவுகளை கற்களால் தாக்கும் சத்தம் கேட்டு எழுந்த போது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச்சென்றதாக கூறி திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார்.
இதையெடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில்
ரியல் எஸ்டேட் தொழில் , பணம் கொடுக்கல் வாங்கலில் சக்திவேலுக்கு நிறைய முன் விரோதம் உள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சக்திவேல் இந்து முன்னணி அமைப்பில் பதவி பெறுவதற்காகவும், பைக் கடன் நிலுவைக்காகவும் இருசக்கர வாகனத்தை எரித்து விட்டு நாடகம் நடத்தியது தெரியவர சக்திவேல் உள்ளிட்ட மூன்றுபேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…