கோயில்களில் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி கரூரில் இந்து முன்னணி அமைப்பு நூதன முறையில் போராட்டம்.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து மக்கள் மீண்டு வரவும், தன்னம்பிக்கையோடு சவால்களை எதிர்கொள்ள ஆன்மீக நம்பிக்கை துணை நிற்கும் என்று ஆலயங்கள் கட்டுப்பாட்டுடன் பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என கரூரில் இந்து ஆலயங்கள் முன்பாக சூடம் ஏற்றி தோப்புக்கரணம் போட்டு கரூர் மாவட்ட இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூரில் இன்று காலை கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் முன்பாக ஆலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் தொழில் மற்றும் வணிகம் நிறுவனங்களுக்கு, மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கோவில்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதாக, அதனை கண்டித்து கோஷங்களை எழுப்பி தோப்புக்கரணம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் புகழிமலை முருகன் கோவில் மாயனூர் ஓம் சக்தி கோயில் என 14 கோவில்களில் தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெற்றது.
இந்த நூதன போராட்டத்தில் கரூர் நகர செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆகிய மூவர் மட்டுமே கலந்துகொண்டு சமூக இடைவெளிவிட்டு கற்பூர தீபம் காட்டி, தோப்புகரணம் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…