கரூரில் இந்து முன்னணி அமைப்பு நூதன முறையில் போராட்டம்.!

Default Image

கோயில்களில் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி கரூரில் இந்து முன்னணி அமைப்பு நூதன முறையில் போராட்டம். 

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து மக்கள் மீண்டு வரவும், தன்னம்பிக்கையோடு சவால்களை எதிர்கொள்ள ஆன்மீக நம்பிக்கை துணை நிற்கும் என்று ஆலயங்கள் கட்டுப்பாட்டுடன் பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என கரூரில் இந்து ஆலயங்கள் முன்பாக சூடம் ஏற்றி தோப்புக்கரணம் போட்டு கரூர் மாவட்ட இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கரூரில் இன்று காலை கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் முன்பாக ஆலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் தொழில் மற்றும் வணிகம் நிறுவனங்களுக்கு, மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கோவில்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதாக, அதனை கண்டித்து கோஷங்களை எழுப்பி தோப்புக்கரணம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் புகழிமலை முருகன் கோவில் மாயனூர் ஓம் சக்தி கோயில் என 14 கோவில்களில் தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெற்றது. 

இந்த நூதன போராட்டத்தில் கரூர் நகர செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆகிய மூவர் மட்டுமே கலந்துகொண்டு சமூக இடைவெளிவிட்டு கற்பூர தீபம் காட்டி, தோப்புகரணம் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Santhosh Narayanan
Kane Williamson
uttar pradesh
Vikram sj suriya
ab de villiers DHONI
d jeyakumar admk