இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் உயிரிழந்தார்.
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரும் இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவருமான வீரத்துறவி திரு.ராமகோபாலன் அவர்கள் இன்று மாலை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியையும் மிகுந்த சோகத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் அவர்கள் மறைவையொட்டி தமிழக பாஜக சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…