இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது – மு.க. ஸ்டாலின்

Published by
Venu

இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி, இந்தி மொழி, அலுவல் மொழியாக அந்தஸ்து பெற்றது.இதன் விளைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில்,இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் இந்தி. நம் நாட்டில் சுதந்திர போராட்டத்திற்கான புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்தே ஒட்டுமொத்த மக்களையும் ஓரணியில் ஒன்றாக திரட்ட இந்தி சக்தி வாய்ந்ததாக பயன்பட்டு வருகிறது. இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் சமமான வளர்ச்சியை மனதில் கொண்டே புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மொழி மற்றும் புவியியல் எல்லைக்கோட்டினால் தான் ஒரு நாடு அடையாளம் காணப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவில் அதன் மொழிகள் தான் பலம். அது நம் ஒற்றுமையில் ஒரு அடையாளம் ஆகும். மொழி, கலாச்சாரம் என இந்திய நாடு வேறுபட்டிருந்தாலும் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைகின்ற மொழியாக இந்தி மொழி இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இந்தி இந்நாட்டை ஒருங்கிணைக்கிறது என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா  இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது.இந்தியைக் காப்பாற்றுவதை விட  கொரோனாலிருந்து மக்களைக் காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் முழு மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

3 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

3 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

4 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

5 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

5 hours ago

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…

6 hours ago