கல்வி உதவித் தொகை திட்டத்திலும் இந்தி வெறி – சு.வெங்கடேசன் எம்.பி

Published by
லீனா

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தந்த வாக்குறுதி நினைவில் இருக்காதா? உங்கள் இந்தி வெறி தணியாதா? என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.

சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகை திட்டம் பயன் பெறுவதற்கான தகுதித் தேர்வு 11.09.2022 அன்று நடைபெறவுள்ளது. இது 9 வது வகுப்பு 11 வது வகுப்பு பயிலும் இதர பிற்பட்டோர், கல்வி ரீதியாக பிற்பட்டோர், சீர் மரபினர் மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டம் ஆகும்.

இந்த தேர்வுக்கான கேள்வித் தாள்களும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் என “திட்ட தகவல் அறிக்கை” மற்றும் “பொது அறிவிக்கை” யில் கூறப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி  ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இணை அமைச்சர் மாண்புமிகு ஜிதேந்திர சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த வருடம் கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (Kishore Vaigyanik Protshahan Yojana) கல்வி உதவித் தொகைக்கான தகுதித் தேர்வு கேள்வித் தாள்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென வலியுறுத்தினேன். அப் பிரச்சினையில் ஒன்றிய அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் “அடுத்த ஆண்டில் இருந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித் தாள்கள் வழங்கப்படும்” என உறுதி அளித்தது.

இப்போது அந்த திட்டமே “இன்ஸ்பையர் சீ” (Inspire She) என்ற திட்டத்தோடு இணைக்கப்பட்டு விட்டது என்பது தனிக் கதை, இன்னொரு புதிய கதைக்கு வருவோம். ”செயலூக்கம் உள்ள இந்தியாவின் இளைய சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகை திட்டம்” (PM YoungAchievers Scholorship Award Scheme for Vibrant India) பயன் பெறுவதற்கான தகுதித் தேர்வு 11.09.2022 அன்று நடைபெறவுள்ளது.

இது 9 வது வகுப்பு 11 வது வகுப்பு பயிலும் இதர பிற்பட்டோர், கல்வி ரீதியாக பிற்பட்டோர், சீர் மரபினர் மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டம் ஆகும். இந்த தேர்வுக்கான கேள்வித் தாள்களும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் என “திட்ட தகவல் அறிக்கை” ( Information Bulletin – page 8) மற்றும்”பொது அறிவிக்கை” (Public Notification -27.07.2022) யில் கூறப்பட்டுள்ளது.

அடித்தள மாணவர்கள் பயன் பெற என ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு இந்தியிலும், ஆங்கிலத்திலும்தான் கேள்வித் தாள் தருவேன் என்பது என்ன நியாயம்? கிராமப்புற மாணவர்கள் – அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி இந்தி பேசும் மாநில மாணவர்களோடு போட்டி போடுவார்கள்?

இது அப்பட்டமான பாரபட்சம், அநீதி, கடந்த ஆண்டு இதே போன்ற பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தந்த வாக்குறுதி நினையில் இருக்காதா? உங்கள் இந்தி வெறி தணியாதா? இல்லை இந்தி பேசாத மாநிலங்களின் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற தவிக்கட்டும் என்று எண்ணுகிறீர்களா? ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராடவும், நீதி மன்றத்திற்கு அலையவும் வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இது தமிழ் இளைஞர்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது. மொழி உரிமை தொடர்பானது, எங்கள் குரல் சோராது! ஓயாது!. தமிழ் உள்ளிட்ட எல்லா மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் வழங்க வேண்டுமென்று கேட்டு ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இணை அமைச்சர் மாண்புமிகு ஜிதேந்திர சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

Recent Posts

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

34 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

47 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

2 hours ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

2 hours ago