“அரசு பள்ளிகளில் இந்தி கட்டாயமா?” கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

Default Image

கோவையில் 1- ம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என குறிப்பிட்டிருந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரன்குமார் ஜடாவத் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வந்தது.

இதன்காரணமாக, கடந்து சில தினங்களுக்கு முன் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிழும் வரும் 17 -ம் தேதி முதல் 1,6,9 -ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்தார். அந்தவகையில் கோவை மாநகராட்சி, அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணியை தொடங்கியது.

அப்பொழுது வழங்கப்பட்ட விண்ணப்பபடிவங்களில் 1- ம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? எனவும், அல்லது அதிகப்படியாக கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என முதல்வர் தெரிவித்துள்ள நிலையில், இந்தி அடங்கிய மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டதா? எனவும், புதிய கல்விக்கொள்கைகளுக்கான நடைமுறையை தமிழக அரசு தொடங்கிவிடீர்களா? மக்கள் பலரும் கேள்வியெழுப்பினர்.

 

இந்தச்சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரன்குமார் ஜடாவத், கோவை மாநகராட்சி பெயரில் வெளியான அந்த மாணவர் சேர்க்கை விண்ணப்பம் போலியானது எனவும், மாநகராட்சி தரப்பில் விண்ணப்பங்கள் எதுவும் வழங்கப்பட இல்லை என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்