இமாச்சல் கார் விபத்து – சைதை துரைசாமி மகன் காணவில்லை!
அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற கார், இமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி மகன் வெற்றி இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். அம்மாநிலத்தின் காசாங் நாலா என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இவரது கார் சென்று கொண்டு இருந்தது.
அப்போது, சைதை துரைசாமியின் மகன் வெற்றி உட்பட 3 பேர் பயணம் செய்த கார் சட்லஜி நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அதுபோன்று, சைதை துரைசாமி மகன் வெற்றியுடன் திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவரும் காரில் இமாச்சல பிரதேசத்துக்கு பயணித்துள்ளார்.
விஜயகாந்த்தின் உருவத்தை டாட்டூ குத்திய பிரேமலதா..!
இந்த விபத்தில் அவரும் படுகாயமடைந்து மீட்கப்பட்டுள்ளார். ஆனால், இவர்களுடன் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றியை மட்டும் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த விபத்தின் போது வெற்றி காரில் இருந்தாரா அல்லது வேறு எங்கும் சென்றாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இருப்பினும், சட்லஜ் நதியில் வெற்றியைத் தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எனவே, இமாச்சலப்பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற சைதை துரைசாமியின் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளானதும், அதில் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.