அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?

என்னுடைய கண்ணியம் காத்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வாயை மூடினேன் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டத்துடன் பேசியுள்ளார்.

ragupathy dmk seeman

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து, சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு  நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை என்பதால் அவருடைய வீட்டில் அந்த சம்மன் ஒட்டப்பட்டது.

அதன்பிறகு அங்கு ஒட்டப்பட்ட சம்மன்  அதை ஒருவர் கிழித்து இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பிறகு சீமான் பிப்ரவரி 28-ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இதனையடுத்து  தற்போது, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் உள்ளது, வரும்  மார்ச் 7, 2025 அன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த சுழலில் இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி  புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தபோது சீமான் விவகாரத்தின் பின்னணியில் திமுகவா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி ” இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சீமானை சமாளிப்பது என்பது எங்களுக்கு தூசு மாதிரி ஒரு விஷயம். நாங்கள் இதில் தலையிட்டு இருந்தால் வழக்கு எங்கையங்கோ திசை திரும்பும் என்பதால் எதுவும் பேசவில்லை” என பேசியிருந்தார்.

இதனையடுத்து அமைச்சர் பேசியது குறித்து இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது சீமானிடம் கேள்விகேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான் ” இந்த உலகத்துக்கே தெரியும் இந்த விஷயத்தை யார் செய்கிறார் என்று. அதை சட்டத்துறை அமைச்சர் பேசுவது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும் நியாத்தை பேசவேண்டும். இங்கு இத்தனை பிரச்சினைகள் இருக்கும்போது ஒண்ணுத்துக்கும் உதவாத இந்த பிரச்சினை பற்றி ஏன் பேசவேண்டும்?

இப்படி பேசுவதற்கு காரணம் நான் தான் என்று எல்லாருக்கும் தெரியும். நாங்கள் இல்லை என்றால் யாரும் பேசமாட்டார்கள். சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்கிறார்கள். சட்டம் சம்மனை கையில் தானே கொடுத்திருக்கவேண்டும்? கதவில் ஒட்டிவிட்டு போவீர்கள்? அப்படியே கதவில் ஓட்டினால் கூட ஒட்டிவிட்டு செல்லத்தான் செய்யவேண்டும். அதனை எடுத்து நான் கிழிக்கிறேன் அல்லது எங்கயோ போடுகிறேன்.

என்னுடைய கையில் கொடுத்துவிட்டு போகிறீர்கள்..நீங்கள் போனவுடன் அந்த சம்மனை கிழித்தால் கைது செய்வீர்களா? சட்டத்தில் அப்படி எதுவும் இருக்கிறதா? சம்மன் ஓட்டுவது தலைமறைவு ஆனால் தான் ஓட்டவேண்டும்..நான் என்ன தலைமறைவு ஆகிவிட்டேனா? இங்கயே தான் இருக்கிறேன்..பிறகு ஏன் ஒட்டவேண்டும்?” என கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து பேசிய சீமான் ” நானும் என்னுடைய கண்ணியம் காத்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வாயை மூடினேன். இனி எல்லாம் முடிவுக்கு வந்துருச்சு இல்லையா..நடிகை என்னைக்கு எனக்கு மரியாதை கொடுத்தா? நீ என்னை, என் குடும்பத்தை எல்லாம் மரியாதை இல்லாமல் பேசுற.. அப்ப நீ என்னை காதலித்தது என்பது எல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று? ஆங்கிலத்தில் ப்ளாக் மெயில் என்போம் இல்லையா. பணம் பறிக்கிறது..இடை மறித்து இடை மறித்து பணம் பறிக்கிறவருக்கு பெயர் என்ன சொல்லுவீங்க? மானங்கெட்ட நீங்களே இந்த மாதிரி பேசும்போது என்னுடைய தன்மானத்துக்காக போராடும் மகன் எப்படி பேசனும்?” எனவும் சீமான் காட்டத்துடன் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 03032025
Narendra Modi lion
mk stalin about all party meeting
Tamilnadu CM MK Stalin
12th Public exam
kl rahul
oscars 2025