அதிக கட்டணம் – காவல்துறை எச்சரிக்கை!
மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.
தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை நேரில் சந்தித்து சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூல் தொடர்பாக மக்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்றும், நாளையும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது அதன்படி, சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை போராட்டம் நடத்தி வருகின்றன.