பணிக்கு வர மறுப்பவர்கள் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
இதனால் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை கொண்டும், தனியார் ஊழியர்களை கொண்டும் குறைந்தபட்ச பேருந்துகளை இயக்கி வருகிறது. சென்னையில் தனியார் ஐடி நிறுவன பேருந்துகளை கொண்டு அரசு மக்களுக்கு இலவசமாக பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான வழக்கில் ‘வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களுக்கு நோட்டிஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பணிக்கு வர மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
source : dinasuvadu.com