திருச்சியில் வரத்து குறைந்ததால் கிலோ 110 ஆக உயர்ந்த வெங்காய விலை!
திருச்சியில் வரத்து குறைந்ததால் கிலோ 100 க்கு உயர்ந்த வெங்காய விலை.
திருச்சியில் கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வடமாநிலங்களில் அதிக மழை பெய்வதால் வரத்து குறைந்துள்ளதாகவும், தமிழகத்தில் பயிரிடப்படக்கூடிய வெங்காயங்கள் மழை காரணமாக நோய் தாக்குதலுக்குட்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 15 டன் வெங்காயங்களை இறக்குமதி செய்ததாகவும் தற்பொழுது வெறும் 3 டன் மட்டுமே கிடைப்பதால் வெங்காய விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இன்னும் இரு மாதங்களுக்கு வெங்காய விலை அதிகரிக்குமாம். கடந்த வாரம் திருச்சியில் விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து சின்ன வெங்காயம் 20 ரூபாயும், பெரிய வெங்காயம் 20 ரூபாயும் இந்த வாரம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது திருச்சியில் முதல்ரக சின்ன வெங்காயம் 110 ரூபாய்க்கும், இரண்டாம் ரக சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பெரிய வெங்காயத்தில் முதல் ரகம் 72 ரூபாய்க்கும் இரண்டாம் ரகம் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறதாம்.