உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதி கிடைத்த அங்கீகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதி முயற்சிக்கு அளித்துள்ள சிறப்பான அங்கீகாரம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது போன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணை முடிந்ததை தொடர்ந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதி முயற்சிக்கு அளித்துள்ள சிறப்பான அங்கீகாரம் என்றும் நாட்டுக்கே வழிகாட்டும் சமூக கடமையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்யும் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞரை வைத்து தமிழக அரசு வாதாடியது. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அவசர அவசரமாக ஒதுக்கீடு அறிவித்தனர். வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தானது பற்றி முதலமைச்சர் விளக்கமளித்தார். இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025