வாக்கு எண்ணிக்கையை ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது? – தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
- வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படவேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டிருந்தது.
- இந்த வழக்கில், என் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய முடியாதுஎ என மதுரை உயர்நீமன்ற கிளை தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அண்மையில், சிவகாசியை சேர்ந்த கிருஷ்ணவேணி உட்பட 10 பேர் மனு கொடுத்திருந்தனர். அதில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையை விடியோவாக பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாநில தேர்தல் ஆணையத்திடம், ஏன் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவாக பதிய முடியாதா என கேள்வி எழுப்பினர். இது குறித்து, தேர்தல் ஆணையம், வாக்கு எண்ணிக்கைமையத்தில் சிசிடிவி காட்சி மூலம் கண்காணிக்கபடுவதாகவும், குறுகிய காலமே இருப்பதால் வீடியோ பதிவு செய்வது கடினம் எனவும் கூறபட்டுள்ளது.
ஆனால், மதுரை உயர்நீதிமன்ற கிளையானது, ‘ இன்னும் இரண்டரை நாட்கள் இருப்பதால் வீடியோ பதிவுக்கான நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கனது மதியம் 1 மணிக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.