உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் வழக்குகள் விசாரணை
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக இதன் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்விளைவாக சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது .ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நேரிலும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் அவசர வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முதல் வழக்குகள் பட்டியலிடப்பட்டு காணொலி மூலம் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.