பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும்! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, தமிழக சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு, மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதனை தொடர்ந்து, சில மருத்துவர்களை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனை எதிர்த்து 8 அரசு மருத்துவர்கள் இணைத்து தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வலக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, ‘ போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை இடமாற்றம் செய்து, தமிழக அரசு ஈடுபட்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.’ என கருத்து தெரிவித்தார்.