சாதி, மதம் அற்றவர் சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை – ஐகோர்ட்

chennai high court

சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் கோரி திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது.

அதற்கான அதிகாரம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு இல்லாத நிலையில், அவர்களுக்கு உத்தரவிட முடியாது. இத்தகைய சான்றிதழ் வழங்குவது சொத்து, வாரிசுரிமை, இடஒதுக்கீடு ஆகியவற்றில் தனிப்பட்ட சட்டங்களை பயன்படுத்தும் போது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீட்டில் எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பிப்.12ம் தேதி தொடங்கும்- சபாநாயகர் அறிவிப்பு!

இருப்பினும், சாதி மதமற்றவர் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டுக்குரியது என்றும் அரசு உத்தரவுப்படி கல்வி நிலைய விண்ணப்பங்களில், சாதி மதம் தொடர்பான அந்த இடத்தை பூர்த்திசெய்யாமல், அப்படியே விட்டு விடலாம் எனவும் நீதிபதி சுப்பிரமணியம் கூறியுள்ளார். மேலும், அரசு தரப்பில் கூறியதாவது, பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது என்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்