வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது, இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்காக 1983ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பின்படி, 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டது அரசியல் மற்றும் தேர்தல் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டது என்றும் இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஓபிசி பிரிவில் இருக்கக்கூடியவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த ஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் மற்ற பிரிவுகளை சேர்ந்தவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது. இதனால் 10.5% இடஒதுக்கட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், இட ஒதுக்கீடு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வன்னியருக்கான 10.5 % உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை, பணி நியமனம் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் இடஒதுக்கீடு அடிப்படையிலான பணி நியமனம், மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், வழக்கின் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 10.5 % உள் இடஒதுக்கீட்டின் கீழ் நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்காமல் வழக்கு செப்டம்பர் 14ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…