BREAKING :சட்டவிரோத பேனர் வழக்கில் அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

Default Image
  • விதிமீறல் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி அதை பிரமாண பத்திரிக்கை  தாக்கல் செய்யவேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டு இருந்தது.
  • ஏன் .? அதிமுக , திமுகவை தவிர மாற்ற காட்சிகள் என்னும் அந்த பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என கேள்விகள் எழுப்பினார்கள்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ பள்ளிக்கரணையில் அ.தி.மு.க., பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக சாலையியில் வைக்கப்பட்ட பேனர் சுபஸ்ரீ மேல் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது அவர் மீது லாரி ஏறியதில் மரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து சட்டவிரோத பேனர் தொடர்பான உயர்நீதிமன்றம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு விதிமீறல் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி அதை பிரமாண பத்திரிக்கை  தாக்கல் செய்யவேண்டும் என கூறியது. இன்று இந்த வழக்கை நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது தமிழகத்தில் பேனர்கள் வைப்பது தடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டது. இதையெடுத்து நீதிபதிகள் இதற்கு முன் எத்தனை விதிமீறல் பேனர் வழக்குகள் தொடரப்பட்டன.தற்போது அந்த வழக்குகளின் நிலைமை என்ன..? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும் , காவல்துறைக்கும் உத்தரவு விட்டனர்.

அதுமட்டுமல்லாமல் விதிமீறல் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி அதை பிரமாண பத்திரிக்கை  தாக்கல் செய்யவேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல்  கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டு இருந்தது.அந்த உத்தரவு எவ்வாறு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஏன் .? அதிமுக , திமுகவை தவிர மாற்ற காட்சிகள் என்னும் அந்த பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என கேள்விகள் எழுப்பினார்கள்.தங்களின் கட்சியினருக்கு அறிக்கையாக வெளியிட்டு விட்டு பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும்.அல்லது ஏன்..?பிரமாண பத்திரிக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லை என்ற விபரத்தை அளிக்கவேண்டும் என கூறி வழக்கை வருகின்ற பிப்ரவரி 27-ம் தேதி ஒத்தி வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்