வைகோ, திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த 2016-ம் ஆண்டு எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் வைகோ, திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி வைகோ மற்றும் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வைகோ மற்றும் திருமாவளவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி வழக்கை நீதிபதி நிர்மல்குமார் ரத்து செய்து உத்தரவிட்டார்.
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…