நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்க -உயர் நீதிமன்றம் உத்தரவு..!
நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் நடந்த விபத்தில் பெண் மருத்துவர் ஒருவருக்கு 90% ஊனம் ஏற்பட்டது. இதனால், அவருக்கு இழப்பீடு தொகையாக 18 லட்சத்தில் இருந்து 1 கோடியே 49 லட்சமாக உயர்த்தி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். மேலும், அந்த வழக்கில் எக்ஸ்பிரஸ் சாலையில் 120 கிலோமீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் எனவும் மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை வேண்டும் எனவும் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே அந்த வேக கட்டுப்பாடு கருவி பொறுத்த வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை இன்று உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது சாலைகளின் மேம்பாட்டையும், இன்ஜின்களின் செயல்பாட்டை அதிகரிக்கவும் வேகம் அதிகரிக்கபட்டதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்தது.
இதை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த 100 கிலோமீட்டர் செல்லலாம் என்ற அறிவிப்பை ரத்து செய்தது. மேலும் வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோ மீட்டருக்குள் வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.