முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில்பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனை பெற்று வரும் நிலையில், பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் புழல் சிறையில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பேரறிவாளனுக்கும் கொரோனா தாக்கிவிடுமோ என்ற எண்ணத்தில் அற்புதம்மாள் இந்த வழக்கு தொடந்துள்ளார்.
அப்போது, தமிழக அரசு தரப்பில் பேரறிவாளனுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தான் 90 நாள்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் பரோல் வழங்கமுடியும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் 2 ஆண்டுகளுக்கு மேல் முடிவு எடுக்காமல் நிலுவையில் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி, ஏழு பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும்..? உரிய நேரத்தில் முடிவெடுப்பார்கள் என்பதால்தான் அரசியல் சாசன பதவி வகிப்பவர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை எனவே 7 பேரின் விடுதலை தொடர்பாகவும், பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…