மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியின்றி புதிய பேருந்துகளை வாங்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகள் இயங்கவில்லை என்றும் அவர்களின் வசதிக்காக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் வைஷ்ணவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, 10% மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தான் பேருந்துகள் கொள்முதல் செய்ய போக்குவரத்துக்கழகம் முடிவு செய்திருப்பதாகவும், இது மாற்றுத்திறனிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு, மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் குறிப்பிட்ட பேருந்துகள் மட்டும் தான் கொள்முதல் செய்யப்படுவதகவும், மோசமான சாலைகளை முழுமையாக மேம்படுத்திய உடன் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டப்படியும், உயர் நீதிமன்றம் உத்தரவின் படியும் மற்ற பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என விளக்கமளித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் ஒரு பேருந்து கொள்முதல் செய்யப்படுவதற்கு ரூ.58 லட்சம் வரை செலவாகும். நிதி நெருக்கடி காரணமாக 10% பேருந்துகள் மட்டும் தற்போது கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாகவும், இந்தியா ஒரு ஏழை நாடு என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் வாதமாக முன்வைத்த பிறகு, இந்திய ஆட்சியாளர்கள் ஏழைகளாக இருக்கிறார்களா? என்றும் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழைகள் எனவும் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
அதேநேரத்தில் மாற்றுத்திறனாளிகளின் சட்டத்தையும், அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு ஆணைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் வாங்க வேண்டும்.
அதுவரை தமிழகத்தில் மாற்றுத்திறனிகளுக்கான வசதியின்றி புதிய பேருந்துகளை வாங்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…