அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள்.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை தடுக்கும் நடைமுறைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் சில சமயம் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தல்ள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகளை தடுக்கும் நடைமுறைகள் என்னென்ன என்பது பற்றிய விரிவான கூடுதல் அறிக்கையை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.