இளையராஜா மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு!
காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடுத்த வழக்கில் இன்ரிகோ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றால்தான் இசையை பயன்படுத்தலாம் என்ற உத்தரவை எதிர்த்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், தயாரிப்பாளர்களுக்கு பட காப்புரிமை மட்டுமே உள்ளது. இசை பணிகளுக்கு அவர்கள் உரிமையாளர்கள் அல்ல என்று தெரிவித்ததை தொடர்ந்து, இன்ரிகோ, அகி, யுனிசிஸ் இன்போ நிறுவனங்கள் 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையராஜா இசையில் வெளியான 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு, 3 கன்னட, 2 மலையாளம் என மொத்தம் 30 படங்களின் இசை பணிகளை இன்ரிகோ ரெக்கார்டிங், அகி மியூசிக், யுனிசிஸ் ஆகிய மூன்று இசை நிறுவனங்கள் பயன்படுத்த தனி நீதிபதி கொண்ட அமர்வு முன்னதாக அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.