காவல் துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது தொடர்பாக 47 இடங்களுக்கு உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை ஆகிய இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது.
6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் 6 இடங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காத்திருக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உள்ளரங்கு கூட்டரங்கு பதிலாக விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும் குறிப்பிட்டனர். காவல்துறை தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன எனவும் தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…