நீர் வளத்தை சீர்குலைக்கும் சீமைகருவேல மரங்கள்… உயர்நீதிமன்ற உத்தரவுகள்…

Published by
மணிகண்டன்

நிலத்தடி நீரை உறிஞ்சி எந்த வித பயனும் கொடுக்காமல் இருக்கும் சீமை கருவேல மரங்களின் தீமைகளையும், அதனை அகற்ற அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளும், நீதிமன்ற உத்தரவு குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  

1950களில் தமிழக நில பரப்புகளின் ஏதோ சில காரணங்களால் பரப்பப்பட்ட விதைதான் தற்போது வரை அகற்ற முடியாமல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளை குறிப்பாக தென் பகுதியின் நீர்மட்டங்களை வெகுவாக பாதித்து வருகிறது. அந்த பாதிப்பு தான் சீமை கருவேல மரங்கள். இந்த மரங்களினால் விறகு கட்டைகளைத் தவிர வேறு எந்த பயனும் இல்லை. இதன் இலை, காய் என எதுவும் பயன்படாது. என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சீமை கருவேல மரங்களின் வேர்கள் சல்லி வேர்கள். இது எந்த வறட்சி வந்தாலும் தாங்கிக் கொள்ளும். அதேபோல் தண்ணீர் வந்து விட்டால் உடனடியாக உறிந்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

விவசாயிகள் வேதனை : மற்ற மரங்கள் செடிகள் கொடிகள் வறட்சி வந்தால் பட்டு போகும். ஆனால், இது அப்படியே தாங்கி நிற்கும். தண்ணீரை வேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் நிலத்தின் நீர்மட்டம் வெகுவாக குறையும். அதுவும் குறிப்பாக தென் தமிழகத்தில் நீர்நிலைகளுக்கு அருகில் இந்த மரங்கள் இருந்து பல்வேறு நிலங்களை வறண்ட பூமி ஆக மாற்றி விட்டன. இதன் நிழலில் கூட வேறு எந்த செடி கொடிகளும் வளராது. எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால் இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நீதிமன்ற கேள்வி : இதனை முழுதாக அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களின் பல்வேறு வழக்குகள் இன்னும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. இதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளும் அவ்வபோது அரசிடம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

அரசின் பதில் : அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் குறித்து விசாரணை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து சில சிக்கல்கள் இருக்கிறது எனவும், இதற்காக சிறப்பு நிதி எதுவும் தற்போது வரை ஒதுக்கப்படவில்லை எனவும் அப்புறப்படுத்த அரசு சாரா அமைப்புகள் முன்வரவில்லை எனவும் விளக்கம் கூறினர். மேலும், தமிழக அரசு குறிப்பிடுகையில் பெரிய இடங்களுக்கு பெரிய பெரிய இயந்திரங்களை உள்ளே கொண்டு செல்ல முடிவதில்லை. அதனால் கருவேல மரங்களை அகற்றுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

நீதிமன்ற யோசனை : அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று அதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒரு புதிய யோசனையையும் வழங்கினர். அதாவது பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மரங்களை அந்தந்த பஞ்சாயத்து அமைப்புகளிடம் கூறி அவர்களுக்கு உத்தரவிட்டு இதனை அகற்ற அந்த நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

நீதிமன்ற எச்சரிக்கை : அடுத்த விசாரணையின் போதும் அப்போதும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருந்தால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதனை ஏற்று அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக சீமை கருவேலை மரங்களை அகற்ற ஏதேனும் சிறப்பு நீதியை ஒதுக்குமா? அல்லது அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீமை கருவேல மரங்களை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? என்பது அந்தந்த பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…

8 hours ago

களைகட்டிய பொங்கல் : அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்டோர் வருகை!

சென்னை :  பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…

10 hours ago

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

11 hours ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

11 hours ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

11 hours ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

12 hours ago