பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பை அகற்ற குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.
மதுரையை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை, பீ.பீ.குளம், நேதாஜி மெயின்ரோடு பகுதியில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டி சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.
மின் இணைப்பு, ஆதார் மற்றும் குடும்ப அட்டை, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவை அரசால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியது. எங்களுக்கு வேறு இடம் இல்லை. நாங்கள் அனைவரும் தினக்கூலிகள். வெளியேற்றினால் கடுமையாகப் பாதிக்கப்படுவோம் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி தலைமையிலான அமர்வு, வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளவர்கள் குடியிருக்கக் குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று இடம் அளிக்க வேண்டும். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பை அகற்ற குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பகுதியில் குடியிருப்போர் நான்கு மாதத்தில் காலி செய்வதாக உறுதி அளிக்க வேண்டும் என்றும் அளிக்காதவர்களின் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை குறிப்பிட்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…