#Breaking:”இனி கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகள் ட்ரோன்கள் மூலம் கண்காணித்திடுக” -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை:கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் உள்ள கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்,பூமியின் கீழ் உள்ள சுரங்கங்கள்,கனிமங்கள் ஆகியன தேசத்தின் சொத்துகள் என்ற உயர்நீதிமன்றம்,தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில்,தேசத்தின் செல்வம் மற்றும் பொதுநலனையும் பாதுகாத்திட வேண்டும் என்றும்,தமிழகம் முழுவதும் சுரங்கங்களுக்கு உரிமத்தொகை நிர்ணயிக்க ட்ரோன் மூலம் அளவிட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சுண்னாம்பு கல் எடுக்க செலுத்தும் உரிமத் தொகையை அதிகரித்த கனிம வளத்துறை நோட்டீஸினை எதிர்த்து தனியார் சிமெண்ட் ஆலை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இத்தகிய உத்தரவை பிறப்பித்துள்ளது.