6 மாதத்திற்குள் டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு..! – மநீம வரவேற்பு

6 மாதத்திற்குள் டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு மநீம வரவேற்பு.
பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என்றும்,டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி,மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியகவோ,மறைமுகமாகவோ பார்களை நடத்த அனுமதியில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்கள் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடை அருகேயுள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும்,டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வழக்கை தள்ளுபடி செய்து,தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவிற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்த உத்தரவிற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் பக்கத்தில், ‘டாஸ்மாக் கடைகளில் பார்கள் நடத்த சட்டத்தில் இடமில்லை; உடனடியாக மூட வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை மநீம வரவேற்கிறது. லட்சக்கணக்கான தமிழர்களை குடிநோயாளிகளாக மாற்றிய கழகங்கள் இதனை உடனடியாக நிறைவேற்றவேண்டும். படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை,பணிநேரம் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பார்கள் நடத்த சட்டத்தில் இடமில்லை; உடனடியாக மூட வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை மநீம வரவேற்கிறது. லட்சக்கணக்கான தமிழர்களை குடிநோயாளிகளாக மாற்றிய கழகங்கள் இதனை உடனடியாக நிறைவேற்றவேண்டும். படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை,பணிநேரம் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும். pic.twitter.com/AkCiuN5xoR
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) February 4, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025