மதுபான விலை பட்டியலை நிரந்தரமாக வைக்க ஐகோர்ட் உத்தரவு!
டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை பட்டியலை நிரந்தராக வைக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அனைத்து மதுபான கடைகளிலும் அவசரகதியில் தற்காலிகமாக விலை பட்டியலை வைத்துள்ளனர் என நீதிபதி கூறியுள்ளார். எனவே, மதுபான விலை பட்டியலை நிரந்தராக வைக்க வேண்டும் என நிர்வாகத்துக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. மதுபானங்களின் விலை பட்டியல் டாஸ்மாக் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், வழக்கறிஞர் குழு ஆய்வு செய்த கடைகளில் மது விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ள படங்களுடன் கூடிய அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அவசர கதியில் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது அறிக்கையில் தெளிவாக தெரிகிறது எனவும் நீதிபதி குற்றசாட்டியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் எஸ்எஸ் சுந்தர் மற்றும் டி.பரதசக்கரவர்தி அமர்வு உத்தரவிட்டது.