மீண்டும் உடல் தகுதி தேர்வு நடத்த -மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
- செல்வம் என்பவர் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தார்.
- பின்னர் நடத்திய உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை நிராகரிக்கபட்டதாக கூறி மதுரையில் உள்ள உயர்நீதி மன்ற நீதிமன்றத்தில் மனு கொடுத்து உள்ளார்.
சமீபத்தில் 2-ம் நிலை காவலர் தேர்வு நடைபெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த செல்வம் என்பவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு ஓன்று தொடர்ந்து உள்ளார்.
அதில் நான் 2-ம் நிலை காவலர் தேர்வு விண்ணப்பித்ததேன் .அதற்காக நடத்தப்பட்ட தேர்விலும் தேர்ச்சிபெற்றேன்.பின்னர் நடத்திய உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை நிராகரிக்கப்பட்டேன்.
ஆனால் இதற்கு முன் நான் பங்கேற்ற போலீஸ் தேர்வில் உடற்தகுதி பெற்று இருந்தேன் .இந்த தேர்வில் நான் தகுதி பெறவில்லை என வெளியேற்றியுள்ளனர். எனவே இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என மனுவில் கூறியிருந்தார். மேலும் இதே போல சில மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வேலுமணி முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களுக்கு வருகின்ற 11 -ம் தேதி மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் மீண்டும் உடல் தகுதித் தேர்வுகள் நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.