பிரதமர் பேரணிக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் உத்தரவு!

pm modi

High Court :கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் (ரோடு ஷோ) பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது. இதற்கு எதிராக கோவை மாவட்ட பாஜக சார்பில் சென்னை உயநீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்ற நிலையில், பேரணிக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பினார்.

Read More – பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு… இன்று மாலை உத்தரவு பிறப்பிக்கும் ஐகோர்ட்!

அப்போது காவல்துறை தரப்பில் கூறியதாவது, தேர்வு நாள் என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்கவில்லை. அதுமட்டுமில்லாமல், பிரதமருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தாலும் அனுமதி மறுத்திருப்பதாக விளக்கமளித்தது. இதையடுத்து, இந்த மனு மீதான உத்தரவு இன்று மாலை பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்திருந்தார்.

Read More – #Election2024: மதுரையில் மீண்டும் எம்பி சு.வெங்கடேசன் போட்டி!

இந்த நிலையில், கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ‘ரோடு ஷோவுக்கு’ அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். அதாவது, கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வாகன பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More – தமிழ் பண்பாட்டின் முதல் எதிரி.. திமுக ஒரு அரக்கன்.! பிரதமர் மோடி ஆவேசம்.!

பேரணி செல்லும் வழி, தொலைவு மற்றும் நேரம் ஆகியவற்றை கோவை காவல்துறையினரே முடிவு செய்யலாம் என்றும் பேரணி செல்லும் பகுதிகள், சாலைகளில் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிபந்தனை விதித்துள்ளார். வரும் 18ம் தேதி பிரதமர் மோடியின் வருகையின்போது கோவையில் 4 கிமீ தூரத்துக்கு ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் பாஜக அனுமதி கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்