தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு!
செயற்கை அருவி உருவாக்கும் விடுதிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
வணிக நோக்கில் செயற்கை அருவிகளை உருவாக்கிய தனியார் ரிசார்டுகள் மீதான எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குற்றாலத்தில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவி உருவாக்கும் விடுதிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கையை நாளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தனியார் ரிசார்டுகளில் செயற்கை கருவிகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாத்துறை இயக்குனர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. நீதிபதிகள் உத்தரவை மதித்து 5 நாட்களில் குழு அமைத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளது.