ஓ.பி.எஸ், இ.பி.எஸ் வழக்கில் பெங்களூரு புகழேந்திக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஓபிஎஸ், இபிஎஸ் வழக்கில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கி அறிக்கை விட்டதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பெங்களூரு புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது, செப் 14ம் தேதி இருவரும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தியிருந்தது.
இந்த நிலையில், அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரும் ஓபிஎஸ், இபிஎஸ் வழக்கில், மனுதாரரான பெங்களூரு புகழேந்தி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புகழேந்தியின் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பது தொடர்பாக செப்.13ல் முடிவு எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025