அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கலை அறிவியல் மற்றும் பொறியியல் எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களையும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கில், ஏஐசிடிஇ மற்றும் யுஜிசிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசும் செப்டம்பர் 30-க்குள் பதில்தர உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.