5 கைதிகளுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் …!
நீண்ட நாட்களாக குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக பரிந்துரை அனுப்பியிருந்தோம். ஆனால், இதுவரை ஆளுநர் ஒப்புதல்அளிக்கவில்லை .
இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது இந்த 49 பேரில் 5 பேர் தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறும், தங்களது மனு மீது ஆளுநர் முடிவெடுக்கும் வரை இடைக்கால ஜாமீன் வழங்குமாறும் கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் இந்த 5 கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த நிலையில், தமிழக அரசின் கருத்தை ஏற்று 5 கைதிகளுக்கும் இடைக்கால ஜீமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவையுள்ளது.