திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்.!
திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வழங்க அனுமதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உரிய முகாந்திரம் இல்லை என கூறி, தலைமை நீதிபதி அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.