முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி மூலம் பெறப்பட்ட நிதி எவ்வளவு என்ற விவரத்தை வெளியிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்தது.? என்ற விவரங்கள் அறிவிக்கவில்லை எனக் கூறி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் அளித்த அந்த மனுவில், முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கியவர்கள் யார் யார்..? என்பது குறித்த எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை எனவே முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வந்த தொகையை பொதுமக்கள் தெரிந்துகொள்ள இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறினார்.
சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் வழக்கறிஞர் கூறுகையில், மற்ற மாநிலங்களில் பொது நிவாரண நிதிக்கு வந்த தொகை குறித்து வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில்தான் வெளியிடப் படவில்லை என கூறினார். இதுகுறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு யார் யார் எவ்வளவு ..?தொகை கொடுத்திருக்கிறார்கள் என்பது குறித்த முழு விவரத்தை தமிழக அரசு இணையதளத்தில் 8 வாரதத்திற்குள் வெளியிட தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…